Translate

Monday, August 14, 2017

Ivy Gourd & cashew fry

               கோவக்காய் முந்திரி பொரியல்

தேவையானவை:
கோவக்காய் −1/4 கிலோ
முந்திரி − 10
தேங்காய்த் துருவல் −1/4 cup
பச்சை மிளகாய் − 2
சீரகம் − 1 tsp
கடுகு −1/2 tsp
உ. பருப்பு −1/2 tsp
வர மிளகாய் −1
 எண்ணெய் , உப்பு −தேவையான அளவு
 செய்முறை:
. கோவக்காயை நீளமாக  நறுக்கவும்.
. முந்திரி பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சீரகம் , பச்சை மிளகாய்,தேங்காய்த் துருவலுடன் நீர் சேர்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உ. பருப்பு ,மிளகாய் தாளித்து  கோவக்காய் மற்றும் 
முந்திரி சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
. காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கி இறக்கவும்.

No comments:

Post a Comment