தேவையானவை:
எள் − 1/4 கப்
கறிவேப்பிலை − 2 கப்
உளுத்தம் பருப்பு −1/4 கப்
சீரகம் − 2 tsp
மிளகு −3 tsp
பெருங்காயம் − 1/4 tsp
மிளகாய் வற்றல் − 2
நல்லெண்ணெய் − 2 tsp
செய்முறை :
- கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி நிழலில் நன்றாக உலர்த்தவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்,பெருங்காயம் சேர்த்து தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும்.
- பிறகு கறிவேப்பிலையை சேர்த்து வறுக்ககவும்.
- வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளளவும்.
- தேவையான போது சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
No comments:
Post a Comment