Translate

Monday, August 21, 2017

Solanum trilobatum Recepies

 Solanum trilobatum               (தூதுவளை) 


  Solanum trilobatum is the principle used as a herb. It will grow in wet places and grow like a bush. Its leaf color is black. Flower is purple. Small pieces appear to ripen. There are sharp thorns in the flag and leaf.

The Ambassador is one of the herbs that are cultivated everywhere in India.  It is a branch of growing across India. Its leaf, flower, kai, root all have medicinal use. It is especially useful for asthma (asthma). [1] It is widely used in the diet to add grind to the diet.


     தூதுவளை தோசை


தேவையானவை

தூதுவளை − 1cup
தோசை மாவு - 1cup
சீரகம் − 1/2 tsp
மிளகாய் வற்றல் − 2
எண்ணெய் − தேவையான அளவு
செய்முறை :
. தூதுவளையை சுத்தம் செய்து சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து மைய அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்து, தேங்காய் 
சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும்.

----------------------------------------------------------------                                  தூதுவளை ரசம்

தேவையானவை:
தூதுவளை இலை - 1 cup
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp

பூண்டு -  6 பல்
மிளகாய் வற்றல் −3
பெருங்காயம் - 1/4 tsp
புளி - சிறிதளவு
கடுகு -  1/2 tsp
கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்த மல்லி -
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கொத்த மல்லி - ஒரு கையளவு

ந. எண்ணெய் − 2 tsp

செய்முறை:
. கடாயில்  ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கி எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
. புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

. கடாயில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து  கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

. சுவையான, சத்தான துதுவளை ரசம் தயார்.

Saturday, August 19, 2017

Cissus quadrangularis Chutney

                 Cissus quadrangularis 
         (பிரண்டை அல்லது வச்சிரவல்லி )



   Cissus  quadrangularis is a medicinal plant. This plant is grown in dense forests and fences. Complete medical practice. Medicines Strengthening the bones Medication for blood source for the source of the drug, handbag umbilical cure.
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். மருத்துவக்குணங்கள் எலும்புகளை பலப்படுத்தும் மருந்து, ரத்த மூலத்துக்கான மருந்து வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து.

        Cissus  quadrangularis Chutney



Incredients

Cissus  quadrangularis - 10 Pies
Coconut Powder -1/4 Cup
Dried Chilli - 4
Mustard -1/2 tsp
Black gram  - 1/2 tsp
Seasame - 1/2 tsp
Tamarind - Slightly
salt  - Slightly
oil - 1 tsp
Asafoetida   - 1/2 tsp
Jaggery - 1/2 tsp


Process
. Put the oil  Slightly   in to the pan .
.Fry the  Cissus  quadrangularis.
.Then fry all the ingredients except the coconut , Tamarind, Jaggery and leave it alone in the frying pan.
.Grind    Cissus  quadrangularis  ,fried  items & all the ingredients. Prepare a delicious chutney

Incredients

பிரண்டை - 10 no
தேங்காய் துருவல் -1/4 cup
உலர்ந்த மிளகாய் - 4
கடுகு -1/2 தேக்கரண்டி
உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி
எள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
உப்பு - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்   - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - 1/2 தேக்கரண்டி

செயல்முறை:
. கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
.பிரண்டையை நன்கு சுருள வதக்கவும்.
.பிறகு தேங்காய் ,  வெல்லம், புளி தவிர அனைத்து பொருட்களையும்   மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு தனியாக வறுக்கவும்.
.பிரண்டை, வெல்லம், புளி, தேங்காய் , உப்பு 
மற்றும்  வறுத்த அனைத்துபொருட்களையும்  கெட்டியாக  அரைத்து எடுத்தால் சுவையான  சட்னி தயார்.





Friday, August 18, 2017

Raw Banana Podimas

              Raw Banana Podimas


தேவையானவை:
வாழைக்காய் −2
இஞ்சி −சிறிதளவு
பச்சை மிளகாய் − 3
எலுமிச்சை பழம் − 1/2
கடுகு − 1/2 tsp
உ . பருப்பு − 1/2 tsp
கடலைப்பருப்பு − 1/2 tsp
பெருங்காயத்தூள் − 1/2 tsp
கறிவேப்பிலை − தேவையான அளவு
எண்ணெய் −தேவையான அளவு
செய்முறை:
.விளைந்த வாழைக்காயை தோல் நீக்காமல்  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
.சூடு ஆறியதும் வாழைக்காய் தோலை உறித்து
 துறுவி எடுத்துக் கொள்ளவும்.
.கடாயில்  எண்ணெய் விட்டு  கடுகு,உ . பருப்பு,
கடலைப்பருப்பு தாளித்து பெருங்காயத்தூள்,
இஞ்சி,பெருங்காயத்தூள்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை , துறுவிய  வாழைக்காய் , உப்பு சேர்த்து பிரட்டி   எலுமிச்சை பழம் சாறு  கலந்து  இறக்கவும்.

Wednesday, August 16, 2017

Foxtail Millet Appam

                        தினை ஆப்பம்

தேவையானவை
தினை − 2 cup
இட்லி அரிசி - 1/4 cup
பச்சரிசி − 3 tsp
வடித்த சாதம் − 1/2 cup
உளுந்து − 3 tsp
வெந்தயம் − 1 tsp
தேங்காய்ப்பூ − 1/2 cup
சர்க்கரை −3 tsp
ஆப்ப சோடாமாவு − 1 tsp
செய்முறை
. தினை,   இட்லி அரிசி,   பச்சரிசி,   உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து 
தேங்காய்ப்பூ ,வடித்த சாதம் சேர்த்து அரைத்து
மாவை புளிக்க விடவும்.
. புளித்த மாவுடன் சர்க்கரை  ,ஆப்ப சோடாமாவு   சேர்த்து தளர்வாக கலந்து  கொள்ளவும்.
. ஆப்ப சட்டியில் எண்ணெய் விட்டு ஓரத்தில் முறுகலாகவும் நடுவில் மெத்தென்று இருக்கும்படி எடுத்தால் சுவையான  தினை  ஆப்பம் தயார்.

CONGURA CHUTNEY

                 CONGURA  CHUTNEY                (Pulichakeerai Chutney)



தேவையானவை
புளிச்சக் கீரை − 1cup
இஞ்சி − 1 துண்டு
பூண்டு − 4 பல்
புளி − நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் − சிறிதளவு
காய்ந்த மிளகாய் − 10
நல்லெண்ணெய் − 100 கிராம்
கடுகு ,உ.பருப்பு −1 tsp
சீரகம்,  கடலை பருப்பு − 1tsp
செய்முறை
. கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
. அதே    எண்ணெயில்   அலசி சுத்தம் செய்த கீரையை  வதக்கி எடுத்து அதனுடன் புளி, காய்ந்த மிளகாய் ,உப்பு சேர்த்து 
அரைத்துக்கொள்ளவும்.
.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி ,பூண்டு 
தட்டி போட்டுத் தாளித்தால் சுவையான Pulichakeerai Chutney தயார்.

Tuesday, August 15, 2017

Udupi Rasapodi


                        உடுப்பி ரசப் பொடி


தேவையானவை
சீரகம் − 1tsp
வெந்ததயம்  − 1tsp
உ. பருப்பு  − 1tsp
வர மிளகாய் −100 கிராம்
தனியா −100 கிராம்
தே.எண்ணெய் −3 tsp
செய்முறை:
. கடாயில் எண்ணெய் ஊற்றி 
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து பொடித்து உபயோகிக்கவும்.

Monday, August 14, 2017

UDUPI TOMATO RASAM

                      உடுப்பி தக்காளி ரசம்
தேவையானவை:
துவரம் பருப்பு −1cup
தக்காளி − 3
புளி − தேவையான அளவு
வெல்லம் − 1 tsp
மஞ்சள் தூள் − 1/4 tsp
கடுகு − 1/4 tsp
பெருங்காயம் −1/4 tsp
ரசப்பொடி −2 tsp
கறிவேப்பிலை ,மல்லித்தழை − சிறிதளவு
உப்பு− தேவையான அளவு
நெய் −2 tsp

செய்முறை :
. துவரம் பருப்பை குக்கரில் நன்கு குழைய
வேகவிடவும்.
. கடாயில் புளி கரைசல் , பொடியாக நறுக்கிய 
தக்காளி , வெல்லம் ,மஞ்சள் தூள் , உப்பு
 சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
. பச்சை வாசனை போன பின்பு  வேக வைத்த 
துவரம் பருப்பு, ரசப்பொடி,கறிவேப்பிலை ,மல்லித்தழை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
.நெய்யில் கடுகு ,பெருங்காயம் தாளித்து 
ரசத்தில் சேர்த்தால் சுவையான   உடுப்பி தக்காளி ரசம் தயார்.

Ivy Gourd & cashew fry

               கோவக்காய் முந்திரி பொரியல்

தேவையானவை:
கோவக்காய் −1/4 கிலோ
முந்திரி − 10
தேங்காய்த் துருவல் −1/4 cup
பச்சை மிளகாய் − 2
சீரகம் − 1 tsp
கடுகு −1/2 tsp
உ. பருப்பு −1/2 tsp
வர மிளகாய் −1
 எண்ணெய் , உப்பு −தேவையான அளவு
 செய்முறை:
. கோவக்காயை நீளமாக  நறுக்கவும்.
. முந்திரி பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சீரகம் , பச்சை மிளகாய்,தேங்காய்த் துருவலுடன் நீர் சேர்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உ. பருப்பு ,மிளகாய் தாளித்து  கோவக்காய் மற்றும் 
முந்திரி சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
. காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து வதக்கி இறக்கவும்.

Friday, August 11, 2017

SPECIAL CURD RICE

                   SPECIAL CURD RICE



 தேவையானவை
பச்சரிசி −1/4 kg
பால் − 1/4 l
பச்சை மிளகாய் −1 tsp(பொடியாக நறுக்கியது)
வெள்ளரிக்காய்,கேரட்− 3 tsp (பொடியாக நறுக்கியது)
திராட்சை,மாதுளை − 2 tsp 
தயிர் - 1/2 cup
கறிவேப்பிலை ,மல்லித்தழை − சிறிதளவு
உப்பு − தேவையான அளவு
 செய்முறை
. பச்சரிசியை  களைந்து பால் மற்றும் 4cup தண்ணீர் சேர்த்து  குக்கரில் நன்கு குழைய வேக வைக்கவும்.
. சாதம் கெட்டியாக இருந்தால் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து  மசித்து கொள்ளவும்.
. சாதம்  ஆறிய பின்பு  இதனுடன்
வெள்ளரிக்காய்,கேரட் , திராட்சை,மாதுளை , தயிர்,உப்பு,கறிவேப்பிலை ,மல்லித்தழை சேர்த்து
கலக்கவும்.
.சுவையான ஸ்பெசல் தயிர் சாதம் ரெடி.

Thursday, August 10, 2017

CHENNA RICE

                       CHENNA RICE


தேவையானவை
சாதம் -1 cup
கருப்பு கொண்டை கடலை − 1/4 cup
சாட் மசாலா −2 tsp
மிளகுத்தூள் − 1 tsp
சீரகத்தூள் −1 tsp
மஞ்சள்தூள் −1/4 tsp
கறிவேப்பிலை −சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 tsp
உப்பு− தேவையான அளவு

செய்முறை 
. சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து ஆற வைக்கவும்.
. கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து சாதம்,வேகவைத்த கொண்டை கடலை ,சாட் மசாலா ,சீரகத்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். 
. பிறகு அடுப்பை சிம்மில் வைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.



Tuesday, August 8, 2017

Sesame & Curry Leaves Podi

SESAME & CURRY LEAVES PODI



 தேவையானவை:
எள் − 1/4 கப்
கறிவேப்பிலை − 2 கப்
உளுத்தம் பருப்பு −1/4 கப்
சீரகம் − 2 tsp
மிளகு −3 tsp
பெருங்காயம் − 1/4 tsp
மிளகாய் வற்றல் − 2
நல்லெண்ணெய் − 2 tsp
 செய்முறை :

  • கறிவேப்பிலையை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி நிழலில் நன்றாக உலர்த்தவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்,பெருங்காயம் சேர்த்து தாளித்து அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு எள் சேர்த்து வெடிக்கும் வரை வறுக்கவும். 
  • பிறகு கறிவேப்பிலையை சேர்த்து வறுக்ககவும்.
  • வறுத்த கலவைகள் சூடு ஆறியதும் மிக்ஸியில்  போட்டு பொடித்து வைத்துக் கொள்ளளவும். 
  • தேவையான போது சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

Snake Gourd Masala

             SNAKE GOURD MASALA




தேவையானவை:
புடலங்காய் −2
பச்சை பட்டாணி − 1 cup
கேரட்- 2
வெங்காயம் , தக்காளி − 2
கரம் மசாலாத் தூள் −1tsp
மஞ்சள் தூள் − சிறிதளவு
கொத்தமல்லி தழை − சிறிதளவு
 உப்பு,  எண்ணெய் − தேவையான அளவு
அரைக்க :
தனியா - 2 tsp
காய்ந்த மிளகாய் −5
தேங்காய்த துருவல் −5 tsp
பொட்டுக்கடலை −2 tsp


செய்முறை:
.வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், 
 தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
.புடலங்காய், கேரட், பச்சை
பட்டாணி மூன்றையும் வேகவைத்து அதனுடன்     சேர்க்கவும்.
.வெந்ததும்     அரைத்த  மசாலா, கரம் மசாலா  மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
. கலவை கெட்டியானதும் மல்லித்தழை தூவி 
 இறக்கவும்.






Monday, August 7, 2017

Snake Gourd Karakari




           
                SANKE GOURD RECEPIES 




 SNAKE GOURD  KARAKARI

Required things:


.Snake Gourd - 2

.Chilli powder - 1tsp
.Garam masala powder - 1tsp
.Onion -2
.Peanut -1/2 cup (roasted & Powder)
.Salt, oil - the required amount
Method:

Remove seeds from the gourd 
    and cut   them into pieces.
.  Add a little oil on the skillet and
   chop the onion.
.  Add chopped snake gourd pieces 
   to  the onion.
. When the gourd is cook well, 
  add   chilli   powder, garam 
   masala   and salt.
. Finally add peanut power.



தேவையான பொருட்கள்:

 புடலங்காய்- 2
மிளகாய்த் தூள் − 1tsp
கரம் மசாலா தூள் − 1tsp
வெங்காயம் −2
வேர்க்கடலை −1/2 கப் (வறுத்து பொடித்தது)
உப்பு , எண்ணெய் − தேவையான அளவு
  செய்முறை:

.புடலங்காயை  விதை நீக்கி பெறிய      துண்டுகளாக  நறுக்கி கோள்ளவும்.
. வாணலியில் சிறிது எண்ணை விட்டு    வெங்காயத்தை வதக்கவும்.
. நறுக்கிய புடலங்காய்த் துண்டுகளை  வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
.புடலங்காய் வதங்கியவுடன் மிளகாய்தூள் , கரம்  மசாலாத்தூள் , உப்பு சேர்த்து  நன்கு    வதக்கவும்.
.வதங்கியதும் வேர்ககடலை பொடியைத்தூவி 
இறக்கி பறிமாறவும்.